செவிலியர்கள் போராட்டம் வாபஸ் – முதற்கட்டமாக 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவதாக அறிவிப்பு
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வந்த ஒப்பந்த செவிலியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அமைச்சர். மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும், மீதமுள்ள ஒப்பந்த செவிலியர்களுக்கும் படிப்படியாக பணி நிரந்தர ஆணைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் முடிவை ஏற்று ஒப்பந்த செவிலியர்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகளில் 4,825 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். 2024ம் ஆண்டு மட்டும் 1,693 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தம் செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்த செவிலியர்களுக்கான ஊதியம் 4 ஆண்டுகளுக்கு முன்பே ரூ.14,000-ல் இருந்து ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டுவிட்டது என்று அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
