ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் வான்வழி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – 20 பேர் கொல்லப்பட்டதாக தகவல்
பாகிஸ்தான் ராணுவம் இன்று அதிகாலை ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் வான்வழித் தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய வான்வழி தாக்குதலில் ஆப்கான் பயங்கரவாதிகள் 20 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் எல்லையில் பயங்கரவாதிகள் தங்குமிடத்தை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். பயங்கரவாதிகளின் மறைவிடங்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகப் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
தற்போது நடத்தப்பட்டுள்ள இந்த வான்வழித் தாக்குதல் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தும். சமீபகாலமாக பாகிஸ்தானுக்குள் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
