பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான புதிய குடியிருப்புகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
டெல்லியில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான புதிய குடியிருப்புகளை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.
பாபா காரக் சிங் மார்க் பகுதியில் 184 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளை பிரதமர் மோடி திறந்துவைத்தார். எம்.பி.க்களுக்கான ஒவ்வொரு வீடும் தலா 5,000 சதுர அடி பரப்பரளவு கொண்டது.
திறப்பு விழாவின் ஒரு பகுதியாக, பிரதமர் வளாகத்தில் சிந்தூர் மரக்கன்றை நட்ட பிரதமர் மோடி, கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.
