Tamilசெய்திகள்

பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார்!

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல்களை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். மதியம் சென்னை விமான நிலையம் வரும் அவர் ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்கிறார். மாலை 3 .00மணி அளவில் அஜந்தா சிக்னல் சந்திப்பு முதல் அண்ணா சதுக்கம் வரை 2 கிலோ மீட்டர் சாலை பேரணியில் பங்கேற்கிறார்.

நாளை (ஏப்ரல் 4) கட்சியினுடைய முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார். நாளை மயிலாப்பூர் தொகுதி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்வதாக இருந்தது. இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படாததின் காரணமாக அந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் வருவதையொட்டி சென்னை மீனம்பாக்கம் கிண்டி உள்ளிட்ட பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு ட்ரோன்கள்கள் பறப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளன.