Tamilசெய்திகள்

காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வந்தார் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான்

சென்னை மயிலாப்பூரில் நாளை நடைபெறும் ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ விரிவாக்க நிகழ்ச்சி நடைபெற உள்ளது. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நகரப் பகுதிகளில் இயங்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் மூலம், 3.05 லட்சம் மாணவர்கள் பயன் பெறவுள்ளனர்.

இத்தொடக்க விழாவில் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இதற்காக, அவர் இன்று மாலை சென்னை வருகை தந்துள்ளார்.

இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பகவந்த் மான் கூறுகையில்,” பஞ்சாப்பில் காலை உணவுத் திட்டத்தை தொடங்குவதற்கான முயற்சியில் உள்ளோம்” என்றார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,” கல்வி, சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.

பஞ்சாப்பில் தற்போது மதிய உணவுத் திட்டம் உள்ளது. காலை உணவுத் திட்டத்தை தொடங்குவதற்கான முயற்சியில் உள்ளோம்” என்றார்.