Tamilசெய்திகள்

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

‘மோன்தா’ புயல் காரணமாக சென்னையில் நேற்று மாலை முதல் விடிய விடிய மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் சேவை மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், மழை தொடர்பாக வரும் கோரிக்கைகள் மற்றும் தேவைகள் பற்றி அங்கு பணியில் இருந்தவர்களிடம் கேட்டறிந்தார்.