விடிய விடிய பெய்த மழை – தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு
வடகிழக்கு பருவமழையையொட்டி தமிழகத்தில் இன்று பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. விடிய விடிய பெய்த கனமழை காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில் கனமழை காரணமாக 3 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறையை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
