Tamilசெய்திகள்

சசிகலாவுடன் கூட்டணி வைத்த ராமதாஸ்! – ஆதரவாளர்கள் அதிருப்தி

அன்புமணி ஆதரவு மற்றும் ராமதாஸ் ஆதரவு என பா.ம.க இரண்டு பிரிவுகளாக பிரிந்த நிலையில், அன்புமணி அதிமுக கூட்டணியில் இணைந்தார். ராமதாஸ் ஆதரவு பா.ம.க யாருடன் கூட்டணி வைக்கும் என்பதில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், அவர் சசிகலாவுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக்கழம் என்ற புதிய கட்சியை தொடங்கிய சசிகலா, திமுக-வை வீழ்த்த புதிய கூட்டணியை உருவாக்குவேன், என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், வருகிற தமிழக மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணியாக சசிகலா கட்சியும், ராமதாஸ் பா.ம.க-இணைந்துள்ளனர்.

இது தொடர்பான ஒப்பந்தத்தில் சசிகலா, ராமதாஸ் ஆகியோர் கையெழுத்திட்டு தமிழக, புதுச்சேரி தேர்தலை எதிர்கொள்ள முடிவு செய்துள்ளனர். இந்த கூட்டணிக்கு சேலத்தில் உள்ள ராமதாஸ் ஆதரவு பா.ம.க-வினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இது குறித்து சேலத்தை சேர்ந்த ராமதாஸ் ஆதர்வாளரான முக்கிய பிரமுகர் ஒருவர், ”சசிகலாவுடன் ராமதாஸ் கூட்டணி அமைத்ததை எங்களால் ஏற்க முடியவில்லை. இது தொடர்பாக விரைவில் கூட்டம் போட்டு எங்கள் எதிர்ப்பை காட்டுவோம். சேலம் மட்டும் இன்றி தமிழகம் முழுவதும் உள்ள பா.ம.க-வினர் இந்த கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார்.