காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் சீமான் வேட்புமனு தாக்கல் செய்தார்
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையடுத்து இன்று தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அதன்படி, வேட்பாளர்கள் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செய்தார். காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இன்று மனு தாக்கல் செய்தார்.
