களத்தில் இல்லாத கட்சி த.வெ.க என்ற கருத்து பதிலடி கொடுத்த செங்கோட்டையன்
தமிழக வெற்றிக்கழக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று காலை கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். எஸ்ஐஆர் குறித்து ஏற்கனவே த.வெ.க தலைவர் விஜய் விரிவாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதுவே பொருத்தமாக இருக்கும்.
ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு பின்னர் ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் ஒவ்வொரு கருத்தை சொல்கின்றனர். அது அவர்களின் கருத்து. தவழும் குழந்தை தான் பெரியவர் ஆவார்கள். பெரியவர் ஆனதற்கு அப்புறம் தான் தன்னாட்சி நடத்துவார்கள். தமிழக வெற்றிக்கழகத்தின் அடுத்த பொதுக்கூட்டம் குறித்து, இன்று மாலை தலைவரிடம் பேசிவிட்டு அது எந்த இடம் என்பதை முடிவு செய்வோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து அவரிடம், களத்தில் இல்லாத கட்சி தமிழக வெற்றிக்கழகம் தான் என தமிழிசை தெரிவித்துள்ளது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு செங்கோட்டையன் பதில் அளித்து கூறும்போது, அது அவருடைய கருத்து. களத்தில் இருக்கின்றோமா இல்லையா என்பது தேர்தல் முடிவுகள் தான் தீர்ப்பளிக்கும் என்றார்.
அதேபோன்று த.வெ.க.வின் அடுத்த வியூகம் என்ன என்பது தொடர்பான கேள்விக்கு, எங்களைப் பொறுத்த வரையிலும் பொங்கல் முடிந்த பிறகு, எங்கள் திருப்புமுனை எப்படி அமைந்து இருக்கிறது என்பதை பார்த்து நாடே வியக்கும் என அவர் தெரிவித்தார்.
