X

ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத் தலைவர் மீதான பாலியன் வன்கொடுமை வழக்கு தீவிரம் – அரசியல் கட்சிகளுக்கு ப.ஜ.க கண்டனம்

ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத் தலைவர் வீரமணி மீதான பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல்துறை விசாரணை தீவிரமடைந்து வரும் நிலையில், அரசியல் கட்சிகளும் பெரும்பாலான ஊடகங்களும் அமைதி காப்பதற்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமைச் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த வழக்கை முடித்து வைக்க சென்னை காவல்துறை முயன்ற நிலையில், நீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகே விசாரணை தீவிரப்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பெரும் தொழிலதிபரான வீரமணியிடம் பல்வேறு தரப்பினரும் நன்கொடைகளைப் பெற்றிருக்கக் கூடும் என்றாலும், இத்தகைய கொடூர குற்றச்சாட்டுக்கள் எழுந்த பிறகும் சமுதாய சீரழிவைக் கண்டிக்காமல் மௌனம் சாதிப்பது அதிர்ச்சியளிப்பதாகச் சாடியுள்ளார்.

இந்தியாவின் பிற பகுதிகளில் நடக்கும் சம்பவங்களுக்குப் பொங்கி எழும் தமிழ் ஊடகங்கள் இந்த விவகாரத்தில் அமைதி காப்பது வெட்கக்கேடானது என்று குற்றம்சாட்டியுள்ள அவர், ‘பணம் என்றால் பிணம் போல் இருப்பான்’ என்ற புதிய பழமொழிக்கு ஏற்ப அரசியல் தலைவர்களும் ஊடகங்களும் நடந்துகொள்வதாகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.