இந்தியாவின் முதல் 24×7 டிஜிட்டல் மருத்துவப் பேருந்து சேவையை அறிமுகப்படுத்தும் சிம்ஸ் (SIMS) மருத்துவமனை
கிராமப்புற சமூக மக்களுக்கு அத்தியாவசியமான மற்றும் முழுமையான மருத்துவ சேவைகளை வழங்கும், சிறந்த நோக்கத்தோடு இந்தியாவின் முதல் மருத்துவப் பேருந்தை ‘சிம்ஸ் ஹலோ டாக்டர் – ஹெல்த் ஆன் வீல்ஸ்’ என்ற பெயரில் தமிழ்நாட்டின் பிரபல மருத்துவமனைகளுள் ஒன்றான சிம்ஸ் மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது. 24 மணி நேரமும் இயங்கும் மருத்துவக் குழுவை கொண்ட இந்த சேவையின் மூலம், மக்கள் இருக்கும் இடத்திலேயே மருத்துவ ஆலோசனைகள், பரிசோதனைகள், தடுப்பூசிகள் மற்றும் அடிப்படை நோயறிதல் சேவைகளை பொதுமக்கள், குறிப்பாக கிராமப்புற மக்கள் பெற்று பயனடைய முடியும்.
தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. தமிழச்சி தங்கபாண்டியன், விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. ஏ.எம்.வி. பிரபாகர ராஜா மற்றும் எஸ்ஆர்எம் குழுமத்தின் தலைவர் டாக்டர். ரவி பச்சமுத்து ஆகியோர் முன்னிலையில், தமிழ்நாட்டின் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் இந்த மருத்துவப் பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சேவை பெறுவதற்காக நோயாளிகள் பதிவு செய்தல், மருத்துவ ஆலோசனை, நோயறிதல், மேல் சிகிச்சைக்கான பரிந்துரைகள் மற்றும் தொடர் சிகிச்சைகள் என அனைத்தும் காகிதமில்லா முறையில் டிஜிட்டல் வடிவில் தடையின்றி மேற்கொள்ளப்படுவது இந்த நடமாடும் மருத்துவப் பிரிவின் சிறப்பம்சம் ஆகும். இதனால் கிராமப்புற மக்கள் நகரங்களுக்கு நீண்ட தூரப் பயணம் அல்லது நீண்ட நேரக் காத்திருப்பு இல்லாமல் தரமான மருத்துவ சிகிச்சையை தங்கள் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே பெற முடியும். இப்பேருந்தில் சிறப்பு மருத்துவர்களுடன் நேரலை வீடியோ மூலம் ஆலோசனை பெறுதல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தடுப்பூசி சேவைகள் மற்றும் ஆரம்ப கட்டத்திலேயே உடல்நல அபாயங்களைக் கண்டறியும் முன்தடுப்பு பரிசோதனை வசதிகள் உள்ளன.
நோய் தடுப்பு மருத்துவம் மற்றும் நல்வாழ்வில் அதிக கவனம் செலுத்தும் ‘சிம்ஸ் ஹலோ டாக்டர்’ சேவைப்பிரிவு, குறிப்பாக கிராமப்புறங்களிலும் மற்றும் மருத்துவச் சேவை குறைவாக கிடைக்கும் பகுதிகளில் தொற்றா நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவுகிறது.
இதன் செயல்பாட்டின் ஒரு பகுதியாக, ‘சிம்ஸ் ஹலோ டாக்டர்’ மருத்துவப் பேருந்து தொழிற்சாலைகள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கிராமப்புறங்களில் பிரத்யேக மருத்துவ பரிசோதனை முகாம்களை நடத்தும். மேலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் நோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் நோக்கத்தோடு சிறப்பு மருத்துவ அமர்வுகளையும் மேற்கொள்ளும். வழிகாட்டலுடன் கூடிய உதவி மருத்துவருடனான சந்திப்பு முன்பதிவுக்கு ஆதரவு மற்றும் சரிபார்ப்பு உறுதி செய்யப்பட்ட சுகாதார தகவலுக்கான அணுகலை வழங்க AI தொழில்நுட்பத்துடன் கூடிய சாட்பாட் வசதியும் இதில் இணைக்கப்பட்டுள்ளது. ‘மிஷன் சிம்ஸ் வில்லேஜ்’ திட்டத்தின் கீழ், கிராமங்களைத் தேர்ந்தெடுத்து, இந்தப் பேருந்து மூலம் தொடர்ச்சியான மருத்துவ சேவைகளை சிம்ஸ் மருத்துவமனை வழங்கவுள்ளது. 044 2001 2001 என்ற எண்ணை அழைப்பதன் மூலம் இச்சேவையை பொதுமக்கள் பெற்றுப் பயனடையலாம்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மாண்புமிகு அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள், “மக்கள் வசிக்கும் இடங்களுக்கே சென்று மருத்துவ சேவைகளை வழங்குவதன் மூலம் பொது சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்துவதில் ‘ஹலோ டாக்டர் – ஹெல்த் ஆன் வீல்ஸ்’ போன்ற முன்னெடுப்புகள் முக்கிய பங்காற்றுகின்றன. அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய, நோய் தடுப்பை மையமாகக் கொண்ட மற்றும் எளிதில் அணுகக்கூடிய இத்தகைய சேவைகளே மருத்துவத் துறையின் எதிர்காலத்தை சுட்டிக் காட்டுகின்றன. சமூக நலனுக்காக சிம்ஸ் மருத்துவமனை முன்னெடுத்துள்ள இம்முயற்சியை நான் மனமாரப் பாராட்டுகிறேன்,” என்று கூறினார்.
எஸ்ஆர்எம் குழுமத்தின் தலைவர் டாக்டர். ரவி பச்சமுத்து பேசுகையில், “மருத்துவமனையின் சுவர்களுக்கு அப்பால், நோயாளிகள் எங்கு இருக்கிறார்களோ அங்கேயே சென்று தேவைப்படும் நேரத்தில் அவர்களுக்குச் சேவை செய்வதே சிம்ஸ் மருத்துவமனையின் நோக்கமாகும். இப்போது தொடங்கப்பட்டுள்ள ‘சிம்ஸ் ஹலோ டாக்டர்’ திட்டம், தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்திற்கான எங்கள் உறுதிப்பாட்டையும், அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது. இந்த 24×7 நடமாடும் மருத்துவச் சேவை, மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தகுந்த நேரத்தில் மருத்துவ வழிகாட்டுதலையும், விழிப்புணர்வையும் வழங்கும்,” என்று தெரிவித்தார். புதுமை மற்றும் சமூக அக்கறையுடன் கூடிய மருத்துவச் சேவையை மறுவரையறை செய்யும் இந்த முன்னெடுப்பு, தரமான மருத்துவ சிகிச்சை எப்போதும் மக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்யும் ஒரு குறிப்பிடத்தக்க முற்போக்கான நடவடிக்கையாகும்.
