இந்தியாவின் சமவெளிப் பகுதிகளில் வெயில் கொளுத்தி வரும் வேளையில், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் எல்லைப் பகுதியான ஜோஜிலா கணவாய் (Zojila Pass) மற்றும் மினாமர்க் (Minamarg) ஆகிய உயரமான மலைப் பிரதேசங்களில் இன்று திடீரெனப் புதிய பனிப்பொழிவு (Fresh Snowfall) ஏற்பட்டு, ஒட்டுமொத்தப் பகுதியும் வெண்படலமாகக் காட்சியளிக்கிறது.
வழக்கமாக இக்காலகட்டத்தில் பனி உருகத் தொடங்கும் நிலையில், தற்போது நிலவி வரும் அதிரடியான பருவநிலை மாற்றம் காரணமாகப் பருவம் தப்பிப் பெய்துள்ள இந்தப் பனிப்பொழிவும், கடுமையான குளிர்காலச் சூழலும் அப்பகுதியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அடுத்த மூன்று நாட்களுக்கு இப்பகுதியில் இடியுடன் கூடிய பலத்த புயல் மற்றும் பனிப்பொழிவு நீடிக்கும் என எச்சரித்துள்ளதால், லே-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துப் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.