Tamilசினிமா

அரசியல் களத்தில் சுந்தர்.சி! – மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடுகிறார்

நடிகை குஷ்புவை தொடர்ந்து அவரது கணவரும், திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகரான சுந்தர்.சி அரசியல் களத்தில் இறங்கியுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் அவர் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய நீதி கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில், புதிய நீதி கட்சி சார்பில், சுந்தர்.சி போட்டியிட இருப்பதாக அக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். இரட்டை இலை சின்னத்தில் சுந்தர்.சி போட்டியிடுவார் என்று சொல்லப்படுகிறது.

மதுரை மத்திய தொகுதி, அமைச்சர் பி.டிஆர்-ன் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.