’பைசன்’ படம் பார்த்து மாரிசெல்வராஜ், பா.இரஞ்சித்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஷ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் சார்பில் பா.இரஞ்சித், சமீர் நாயர், தீபக் சீகல், அதிதி ஆனந்த் ஆகியோர் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பைசன்’ திரைப்படம் மக்களிட்ம பெரும் வரவேற்பை பெற்று, வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை பார்த்துவிட்டு படத்தின் இயக்குநர் மாரிசெல்வராஜ், மற்றும் தயாரிப்பாளர் பா.இரஞ்சித் இருவரையும் பாராட்டியுள்ளார்.
படம் பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த், ”சூப்பர் மாரி சூப்பர் பைசன் பார்த்தேன் படத்துக்கு படம் உங்கள் உழைப்பும் உங்கள் ஆளுமையும் என்னை ஆச்சரியபடுத்துகிறது மாரி வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ள இயக்குநர் மாரி செல்வராஜ், “பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை பார்த்துவிட்டு என்னை அழைத்து பாராட்டியது போலவே எனது ஐந்தாவது படமான பைசன் (காளமாடன்) பார்த்துவிட்டு என்னையும் ரஞ்சித் அண்ணனையும் தொலைபேசியில் அழைத்து மனதார பாராட்டிய சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு என் சார்பாகவும் என் மொத்த படக்குழு சார்பாகவும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.
