Tamilசெய்திகள்

டி20 கிரிக்கெட் தரவரிசை – முதலிடத்திற்கு முன்னேறிய வருன் சக்கரவர்த்தி

டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.

இதில் இந்திய பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி 3 இடங்கள் முன்னேறி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். சமீபத்தில் நடந்த டி20 போட்டிகளில் அவர் சிறப்பாக பந்து வீசினார்.

பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் அபிஷேக் சர்மா முதலிடத்திலும், திலக் வர்மா 2 இடம் பின்தங்கி 4-வது இடத்திலும் சூர்யகுமார் யாதவ் 7வது இடத்திலும் உள்ளார்.

ஆல் ரவுண்டர் தரவரிசையில் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா முதலிடத்தில் நீடிக்கிறார்.