மதுரை மாவட்டம் மேலூர் அரசுப் பள்ளியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘வாடி வாடி கைப்படாத CD’ என்ற பிரபல குத்துப் பாடலுக்குத் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் வி ஸ்வநாதன் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) கட்சி இணைச் செயலாளர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் மேடையில் குத்தாட்டம் போட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கல்வி கற்கும் உன்னத இடமான அரசுப் பள்ளி வளாகத்திற்குள், மாணவர்களின் முன்னிலையிலேயே பொறுப்பான பதவியில் இருக்கும் அமைச்சரும் அரசியல் கட்சிப் பிரமுகர்களும் இதுபோன்ற சினிமாப் பாடல்களுக்கு நடனமாடியது ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசுப் பள்ளிகளின் மாண்பைக் குலைக்கும் வகையில் நடந்துகொண்ட இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், இந்த விவகாரம் தற்போது அரசியல் தளத்திலும் கல்வித்துறையிலும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.