Tamilசெய்திகள்

இரண்டு புதிய பண்டிகைக்கால சலுகைகளுடன் ‘தங்கத்தை பரிமாற்றம் செய்யும் திட்டத்தை நீட்டிக்கும் தனிஷ்க்

இந்தியா முழுவதும் மக்களின் ஆழமான நம்பிக்கையைப் பெற்ற டாடா குழுமத்தின் நகை பிராண்டான தனிஷ்க், சச்சின் டெண்டுல்கரின் ஆதரவு பெற்ற நாடு தழுவிய திட்டமான’தங்கத்தை மாற்றும் திட்டத்தை’ நீடித்திருக்கிறது. இந்தியக் குடும்பங்கள் தங்கத்தை எளிதாக மாற்றவும், புத்திசாலித்தனமாக வாங்கவும் உதவும் வகையில் இரண்டு புதிய சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள, பழைய தங்கத்தை மாற்றும்போது எந்தக் கழிவும் இல்லாத (0% deduction) திட்டத்துடன் சேர்த்து, தற்போது பின்வரும் இரண்டு புதிய சலுகைகளை தனிஷ்க் அறிமுகம் செய்திருக்கிறது:

• தங்கத்திற்கு முன்கூட்டி பணம் செலுத்தும்போது, வாங்குவோருக்கு சிறந்த தங்க விலை (BGR)
• தங்கத்திற்குப் பதில் வைரத்தை மாற்றிக்கொள்ளும் வசதி

தங்களிடம் இருக்கும் தங்கத்தின் மதிப்பை வெளிக்கொணர்ந்து, பயனடைவதற்கு இந்த கூடுதல் சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு அதிக வழிமுறைகளை வழங்குகின்றன. தங்க இறக்குமதி மீது நம் நாடு சார்ந்திருப்பதை குறைப்பதற்கு இது உதவுவதோடு, அதிக தெளிவுடன் ஆபரணங்களை வாங்குவதை வாடிக்கையாளர்கள் திட்டமிடுவதற்கும் இது உதவுகிறது. இந்திய குடும்பங்களில் மட்டும் சுமார் 25,000 டன் எடையுள்ள தங்கம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, அதேசமயம் ஒவ்வொரு ஆண்டும் நம் நாட்டின் தங்கத்திற்கான தேவையில், 99 சதவீதம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. மக்கள் தங்கள் வீட்டில் வெறுமனே வைக்கப்பட்டிருக்கும் பழைய தங்கத்தை புழக்கத்திற்குக் கொண்டு வந்து, புதிய நகைகளாக மாற்றிக் கொள்வதை ஊக்குவிப்பதன் மூலம், நம் நாடு இறக்குமதி செய்யும் தங்கத்தின் அளவைக் குறைக்கவும், அந்நியச் செலாவணியை மிச்சப்படுத்தவும் தனிஷ்க் உதவுகிறது.

தனிஷ்க்: தங்கம் மற்றும் வைர நகை விற்பனைச் சலுகைகள்:

சிறந்த தங்க விலை (BGR) சலுகை:சிறந்த தங்க விலை (BGR) சலுகையின் கீழ், வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே நகைகளை முன்பதிவு செய்து தங்கத்தின் விலையை உறுதி செய்து கொள்ளலாம். பில் போடும் நேரத்தில், முன்பதிவு செய்த விலை அல்லது அன்றைய சந்தை விலை ஆகிய இரண்டில் எது குறைவாக இருக்கிறதோ, அந்த விலையே வசூலிக்கப்படும். இந்தச் சலுகை 2026 ஜனவரி 24 முதல் பிப்ரவரி 25 வரை செய்யப்படும் முன்பதிவுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். தங்க நகைகளை இத்திட்டத்தின் கீழ் வாங்குவதற்கானசெயல்முறை (பில்)பிப்ரவரி 25-க்குள் நிறைவு செய்யப்பட வேண்டும். தனிஷ்க் ஸ்டோர்களில், தனிஷ்க் தயாரிப்புகளுடன் சேர்த்து வாங்கப்படும் ‘மியா’ தயாரிப்புகளுக்கும் இந்தச் சலுகை பொருந்தும்.

தனிஷ்க் தனது வாடிக்கையாளர்களுக்காக பழைய தங்கத்தை புதிய வைர நகைகளாக மாற்றிக்கொள்ளும் வசதியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் குடும்பங்கள் தங்கள் பாரம்பரிய தங்க நகைகளை, தற்போதைய விருப்பத்திற்கு ஏற்ப நவீன வைர ஆபரணங்களாகபரிமாற்றம் செய்துகொள்ள முடியும்.

இது குறித்து தனிஷ்க் விளம்பரத் தூதர் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறுகையில், “இந்தியக் குடும்பங்களின் முக்கிய தருணங்களிலும், நிகழ்வுகளிலும் தங்கம் எப்போதும் ஒரே மையமாக இருந்து வருகிறது. தனிஷ்க்-ன் தங்க பரிமாற்றத் திட்டம் தங்கள் நகைகளை புதுப்பிப்பதற்கு ஒரு தெளிவான மற்றும் நம்பிக்கையான வழிமுறையை மக்களுக்குவழங்குகிறது. இத்தகைய புதிய சலுகைகள் சிறப்பாக திட்டமிடவும், தங்கள் நகைகளை புதிதாக தரம் உயர்த்திக் கொள்ளவும் குடும்பங்களுக்கு உதவுவதோடு, நம் நாட்டின் தங்க இறக்குமதி தேவையைக் குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன” என்றார்.

30 லட்சத்திற்கும் மேற்பட்டஇந்தியர்கள் தனிஷ்க்-ன் தங்க பரிமாற்றத் திட்டத்தில் பங்கேற்று,சுமார்1.7 லட்சம் கிலோதங்கம் மறுசுழற்சி செய்யப்பட உதவியிருக்கின்றன.தனிஷ்க் நிறுவனத்தின் மொத்த வணிகத்தில் சுமார்40 சதவீதம்இந்த பரிமாற்றத் திட்டத்தின் மூலம் இப்போது கிடைக்கிறது. இது நம் நாட்டின் மிகப்பெரிய, ஒருங்கிணைக்கப்பட்ட தங்க மறுசுழற்சி முன்னெடுப்பு திட்டங்களில் முக்கியமானதாக திகழ்கிறது.

இந்த புதிய சலுகைகள் மூலம், தனிஷ்க் பெரிய அளவிலான தங்கப் பரிமாற்றம் மற்றும் முன்கூட்டிய கொள்முதல் திட்டங்களில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. இது வாடிக்கையாளர்களுக்கு நவீன நகைகளை வாங்குவதற்கான வாய்ப்புகளை வழங்குவதோடு, தங்க இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் இந்திய அரசின் திட்டத்திற்கும் ஆதரவளிக்கிறது.