Tamilசெய்திகள்

தமிழகம் முழுவதும் உடனடியாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் – இந்து மக்கள் கட்சி கோரிக்கை

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட வேண்டும், என்று இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் சார்பில் நா.அனந்த் என்பவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தீய சக்தி திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி கடந்த ஐந்து ஆண்டுகள் திராவிட மாடல் ஆட்சியில் தமிழகம் முழுவதும் 24மணிநேரமும் டாஸ்மாக் கடைகளை திறந்து வைக்கப்பட்டது

குறிப்பாக பள்ளி/ கல்லூரி/ மருத்துவமனை/ கோவில்கள்/ மற்றும் குடியிருப்பு பகுதிகளில் திராவிட மாடல் அரசு டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து கொள்ளையடித்து கொண்டு இளம் விதவைகள் மற்றும் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 8,752 கொ….கள்! இதில் 1,977 பெண்கள்!!

பெண்களுக்கு எதிராக 44 ஆயிரம் குற்றங்கள் பதிவாகியுள்ளன இதில் 2,200 பாலியல் குற்றங்கள் இந்தியாவில் எங்குமே இல்லாத கூட்டுப் பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்துள்ளது

மதுராந்தகத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து தப்பியுள்ளது ஒரு மனித மிருகம் கடந்த 4 வாரங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரியில் இரண்டரை வயது குழந்தையை ஒரு மிருகம் பாலியல் வன்கொடுமை செய்து, கொ……செய்துள்ளதாகவும் அந்த மிருகம் தீய சக்தி திமுக இளைஞரணியைச் சேர்ந்தவர் எனக் கூறுகிறார்கள்.

மேலும் கும்மிடிப்பூண்டி சம்பவம், யார் அந்த சார் அண்ணா பல்கலைக் கழக சம்பவம் என ஏகப்பட்ட பாலியல் குற்றங்கள் மேலும் போதைப் பொருட்கள் சரளமாக உலாவிக்கு கொண்டு இருந்தது கடந்த ஐந்து ஆண்டுகள் திராவிட மாடல் ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 107 டன் கஞ்சா, 3.59 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல் தனியார் பல்கலைக்கழக மாணவர்களிடம் 5,250 கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் நகரங்களில் மட்டுமின்றி கிராமங்களிலும் போதைப் பொருள்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது போதையால் விவசாயிகளின் தற்கொலை திமுக கூட்டணி திராவிட மாடல் ஆட்சியில் அதிகரித்துள்ளது

சாதாரணமாக பேசி தீர்க்க வேண்டிய விவகாரங்கள் எல்லாமே டாஸ்மாக் கடைகளில் மது அருந்துவதால் கொ… களில் முடிந்துள்ளது தமிழகத்தில் சமீபத்தில் ஆணவப்படுகொ…. களும் அதிகரித்துள்ளது இதற்கு எல்லாமே மூலக்கூற்று தமிழக அரசே மது விற்பனை செய்வதனால் அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது

இச்சூழலில் தமிழகத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது தேர்தல் முறையாகவும் நேர்மையாகவும் நடத்திட வேண்டுமெனில் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூடவேண்டும்

எனவே தமிழகத்தில் மதுப் பழக்கத்தினால் ஏற்படும் கொ…/கொ…கள்/ சமூக சீர்கேடுகள், குடும்பப் பாதிப்புகள் மற்றும் உடல்நலப் பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டி, டாஸ்மாக் கடைகளை உடனடியாக முழுமையாக மூட வேண்டும் என்ற கோரிக்கை இந்து மக்கள் கட்சி- தமிழகம் வலியுறுத்துகிறது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.