Tamilசெய்திகள்

டாஸ்மாக் முறைகேடு வழக்கு – செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம்

திமுக ஆட்சியின் போது டாஸ்மாக் நிறுவனத்தில் மதுபானங்கள் கொள்முதல், பார் உரிமங்கள் மற்றும் ஊழியர் நியமனங்களில் பெரும் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் டாஸ்மாக் முன்னாள் நிர்வாக இயக்குநர் விசாகன் உள்ளிட்டோர் மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்து 41 இடங்களில் அதிரடிச் சோதனை நடத்தியது.

இந்த வழக்கில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, அவர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர மேல்முறையீடு செய்யப்பட்டது.

இம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பக்ஸி அடங்கிய அமர்வு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில், லஞ்ச ஒழிப்புத்துறையின் வழக்கு விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், இப் புகார் மனு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்கவும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.