அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தற்காலிகப் போர் நிறுத்தம்! – இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தற்காலிகப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று காலை வர்த்தகத் தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிரடியாக 50 காசுகள் உயர்ந்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வந்த பதற்றம் தணிந்ததால், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கியுள்ளது இந்தியப் பொருளாதாரத்திற்குச் சாதகமாக அமைந்துள்ளது. இதன் காரணமாக, முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்து, இந்திய ரூபாயின் மதிப்பு வலுவடைந்துள்ளது.
கடந்த சில நாட்களாகப் போர் அச்சத்தால் கடும் சரிவைச் சந்தித்து வந்த ரூபாய் மதிப்பு, தற்போது இந்த அமைதிப் பேச்சுவார்த்தை அறிவிப்பால் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது உலகளாவிய நிதிச் சந்தைகளில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
