திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாறினால் என்ன தவறு என்ற தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார். இதுகுறித்து அமைச்சர்சேகர்பாபு கருத்து கூறுகையில்,
வடமாநிலங்களில் வேண்டுமானால் பா.ஜ.க.வினர் நினைத்த செயல் நடைபெறலாம், தமிழ்நாட்டில் நடக்காது. சாதி, மத, இன மொழிகளுக்கு அப்பாற்பட்ட தமிழ்நாட்டில் பா.ஜ.க. திட்டங்கள் எல்லாம் எடுபடாது.
சனாதனம் மட்டுமல்ல எந்தவொரு கொள்கையும் மக்களை பிளவுபடுத்த கூடாது. பா.ஜ.க.விடம் முழுவதும் அடிமைபடுத்தப்பட்ட அ.தி.மு.க. என்ற தேர் 2026-ல் நிலைக்கு வராது என்றார்.