Tamilசெய்திகள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வான 644 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை காணொலி மூலம் தொடங்கி வைத்து, பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

* ரூ.104.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 2 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை திறந்து வைத்தார்.

* கொட்டாம்பட்டியில் புதிய பேருந்து நிலையம், 66 பள்ளிக் கட்டடங்களையும் திறந்து வைத்தார்.

* 4 புதிய நூலக கட்டடங்கள், 49 பொது விநியோக கடைகள் உள்ளிட்ட பல திட்டங்களை திறந்து வைத்தார்.

* தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வான 644 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.

* 182 உதவி மருத்துவ அலுவலர்கள், 48 பல் மருத்துவர் பணிக்கு தேர்வானோருக்கு பணிநியமன ஆணை வழங்கினார்.

* 324 அறுவை அரங்கு உதவியாளர்கள், 18 உளவியல் உதவி பேராசிரியர்களுக்கான ஆணையை வழங்கினார்.

* 54 வட்டார சுகாதார புள்ளியியலாளர்கள், 17 மருந்து ஆய்வாளர்களுக்கு பணி ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.