பால் தினகரன் தலைமையில் சென்னையில் நடைபெற்ற கிறிஸ்தவ ஒருங்கிணைப்பு புது வருட பிரார்த்தனை!
புது வருட ஆசீர்வாதத்திற்காக ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்களின் கூடுகையில் எல்லா கிறிஸ்தவ சபை தலைவர்களும், கிறிஸ்தவ சமூக சேவர்களும், ஊடகத்துறை தலைவர்களும், வழக்கறிஞர்களும், கல்வி ஸ்தாபனங்களின் தலைவர்களும் மற்றும் சமூக பிரமுகர்களும், சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஒன்றாக கூடி, 40 அடி நீளம் கொண்ட கேக் வெட்டி புதுவருடத்தை கொண்டாடினார்கள்.
இதனை இயேசு அழைக்கிறார் நிறுவன தலைவரும், காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தரும், சீஷா தொண்டு நிறுவன தலைவருமான பால் தினகரன் ஒருங்கிணைத்து நடத்தினார். இந்த மகாப் பெரிய கிறிஸ்தவர்களின் கூடுகை புது வருட பேரின்ப பெருவிழா என்ற பெயரில் கொண்டாடப்பட்டது. இதில், பல்வேறு கிறிஸ்தவ சபைகளை சேர்ந்த 100 பேர் கொண்ட பாடகர் குழு பாடல்களை பாடி சிறப்பித்தார்கள்.
3 ஆம் தேதி சாமுவேல் பால் தினகரன் தலைமையில் வாலிபர்களுக்காக விசேஷித்த கூடுகை நடைபெற்றது. இந்த புதிய வருடத்தில் எல்லா ஜனங்களுடைய கண்ணீரும் துடைக்கப்பட வேண்டுமென்றும், தேசம் மற்றும் மாநிலங்களின் நிர்வாகம் இறைவனால் வழி நடத்தப்படவும், அதன் நிமித்தம் எல்லா இந்தியர்களும் சமமாக பராமரிக்கப்படவும், இந்திய பிரஜைகள் எல்லாரும் சமாதானத்தோடு வாழ்வு நடத்தவும், இறையாசி பெருகி, செழிப்பு உண்டாகவும், யாவருடைய வீடும், குடும்பமும், பொருளாதாரமும், வணிகமும், சமூக சேவையும் கட்டப்படவும், பால் தினகரன், ஸ்டெல்லா தினகரன், இவாஞ்சலின் பால் தினகரன், சாமுவேல் பால் தினகரன், ஷில்பா தினகரன், ஷேரன் தினகரன், ஸ்டெல்லா ரமோலா மற்றும் டேனியல் டேவிட்சன் இணைந்து பாடல்களோடு விசேஷித்த பிராத்தனை நடத்தினார்கள்.
நிகழ்ச்சி குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய பால் தினகரன், “சுவேஷித்த இந்த புதிய வருடத்தில் இயேசுவின் ஆசி அனைத்து மக்களுக்கும் பாகுபாடின்றி கிடைக்கவும், அனைத்து மக்களும் சமாதானமாக வாழவும், மக்கள் அனைவரும் சமமாக வாழ்வதோடு, அவர்களிடத்தில் சகோதரத்துவம் நிலைத்திறுக்கவும், சகோதரத்துடனும் வாழவும், தேசத்தில் பொருளாதாரம் பெருமி, அனைத்து மக்களிடன் குடும்பங்கள் பல நன்மைகளை பெறவும், அனைத்து கிறிஸ்தவ சபைகளும், அனைத்து கிறிஸ்தவ சபை தலைவர்களும், சாதி மதம் இன வேறுபாடின்றி பிரார்த்தனை செய்திருக்கிறோம். அதன் பலன் நிச்சயம் மக்களுக்கு கிடைக்கும்.
இது மாத்திரம் அல்லாமல், அனைத்து கிறிஸ்தவ தலைவர்களும் ஒன்றிணைந்து இந்த தேசத்திற்கும் மக்களுக்கும் இன்னும் கூடுதலான நன்மைகள் செய்யலாம் என்று ஆலோசித்திருக்கிறோம். கல்வி, மருத்துவம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு வகையில் பல முன்னேற்ற பணிகளை இந்த தேச மக்களுக்கு செய்ய இருக்கிறோம்.” என்றார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது கேரள மாநிலத்தில் கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தும், தற்போது தென் இந்தியாவில் மத ரீதியான சர்ச்சைகள் உடுவெடுக்க தொடங்கியிருப்பதை எப்படி பார்க்கிறீர்கள் ? என்ற பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த பால் தினகரன், “தேசத்தில் பலவிதமான சம்பவங்கள், முக்கியமாக கிறிஸ்தமஸ் நாளில் நடந்ததை பார்க்கிறோம். ஆண்டவர் எங்களுக்கு சொல்லிக் கொடுத்தது எல்லாம், உங்களுக்காக ஜெபம் செய்கிறவர்களுக்கு ஜெபம் செய்வது மட்டும் அல்ல, நன்மை செய்தவர்களுக்கு நன்மை செய்வது மட்டும் அல்ல, உங்களுக்கு தீமை செய்தவர்களாக இருந்தாலும், நன்மை செய்தவர்களாக இருந்தாலும், எந்தவித பாகுபாடின்றி நீங்கள் ஜெபம் செய்து அவர்களுக்கு இன்னும் கூடுதலான நன்மை செய்யுங்கள், அதற்கான பலனை நான் கொடுப்பேன், நான் அனைவரது இருதயங்களையும் மாற்றி, மக்களை ஒன்றினைப்பேன், என்று சொல்லியிருக்கிறார். அதனால், யார் என்ன செய்தாலும், அவர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் இன்னும் அதிகமான பிரார்த்தனைகள் மற்றும் சேவைகளை செய்ய எங்களை நாங்கள் அர்ப்பணிக்கப் போகிறோம்.” என்று தெரிவித்தார்.
இயேசு விடுவிக்கிறார் நிறுவன தலைவர் மோகன் சி.லாசரஸ், சி.எஸ்.ஐ சென்னை மண்டல பேராயர் பால் பிரான்சிஸ், கத்தோலிக்க பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி, அருள்தந்தை ஜி.ஜே.அந்தோனிசாமி, போதகர் டி.மோகன், பேராயர் கதிரொளி மாணிக்கம், ஆயர் லாரன்ஸ் பயஸ், அசம்பிளி ஆஃப் காட் தேசிய தலைவர் போதகர் ஆபிரகாம் தாமஸ், எஸ்.பி.சி.பேராயர் கே.பி.எடிசன், போதகர் ஜான் எப் காலேஃப், சத்தியம் டிவி தலைவர் ஐசக் லிவிங்ஸ்டன், மாதா டிவி தலைவர் அருள்திரு டேவிட் ஆரோக்கியம், AICC பேராயர் மோகன்தாஸ், பேராயர் கிறிஸ்டியன் சாம்ராஜ், போதகர் சாம் பி.செல்லத்துரை, TELC போதகர் ஜெயசிங், பேராயர் தினத்தூது ராஜா, போதகர் சுவர்ணராஜ், போதகர் ஆனந்த், பேராயர் மோஷாக், பேராயர் லியோ நெல்சன், அருள்திரு பெனடிக், சுவிசேஷகர் ஜி.பி.எஸ்.ராபின்சன், போதகர் கல்யாண் குமார், கல்வாரி போதகர் பிரேம்நாத் சாமுவேல், MCC முதல்வர் பால் வில்சன், WCC முதல்வர் லில்லியன் ஜாஸ்பர், என்.ஜி.சி பேராயர் கிங்ஸ்லி, போதகர் ராஜன் ஜான் மற்றும் அநேக கிறிஸ்தவ பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
இதில், மோகன் சி.லாசரஸ் தேசத்திற்காகவும், மாநிலத்திற்காகவும் விசேஷித்த பிரார்த்தனை நடத்தினார். சி.எஸ்.ஐ சென்னை மண்டல பேராயர் பால் பிரான்சிஸ் புது வருட ஆசீர்வாதத்திற்கான பிரார்த்தனை நடத்தினார். இயேசு அழைக்கிறார் நிறுவன தலைமை நிர்வாகி முனைவர் எஸ்.ஜே.கிங்ஸ்லி ஒருங்கிணைப்பில் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது.
