Tamilசெய்திகள்

காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது – நாளை கரையை கடப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

வங்கக்கடலில் நிலவிய புயல் சின்னம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் வடக்கு ஆந்திரா இைடயே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது. இது இன்று காலை நிலவரப்படி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று உள்ளது.

மேற்கு மத்திய மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்காள விரிகுடா மற்றும் வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கடற்கரைகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அமைந்துள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக் கூடும். இந்த புயல் சின்னம் நாளை (19-ந்தேதி) அதிகாலை தெற்கு ஒடிசா-வடக்கு ஆந்திரா கடற்கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்றிரவு மழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கூடலூர் பஜாரில் 14 செ.மீ. மழை பெய்துஉள்ளது. சின்னகல்லார்-9, சோலையார்-8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.