கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொள்கைகள் காற்றோடு காற்றாக பறந்துவிட்டது – எடப்பாடி பழனிசாமி தாக்கு
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். தற்போது தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி இன்று ராஜபாளையத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது மக்களிடம் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, “உங்களுக்கு (திமுக) கூட்டணி வலிமையாக இருக்கலாம், ஆனால் எங்களுக்கு மக்கள் வலிமையாக இருக்கிறார்கள்; ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி, தோல்வியை நிர்ணயம் செய்வது மக்கள்தான். அந்த மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள்.
கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொள்கைகள் காற்றோடு காற்றாக பறந்துவிட்டது. மக்களிடத்தில் நீங்கள் செல்வாக்கை இழந்து விட்டீர்கள். தேர்தல் நேரத்தில் உங்களது கட்சி அடையாளம் தெரியாமல் போய்விடும். இன்றைக்கு இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி மக்களுக்காக போராட்டம் நடத்தவில்லை.
50 மாதத்தில் ஒரு முறையாவது திமுகவை எதிர்த்து கம்யூனிஸ்டு கட்சிகள் அறிக்கை விட்டிருக்கிறதா? ஆணவக் கொலை பற்றி பேச திமுக கூட்டணி தலைவர்கள் முதல்வரிடம் அனுமதி கேட்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
