Tamilசெய்திகள்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பில்லை – வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக்கடலில் நிலைக்கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறாது என்றும் வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பில்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவிழக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.