Tamilசெய்திகள்

அமமுக வேட்பாளரை ஆதரித்து டிடிவி தினகரன் இன்று காரைக்குடியில் பிரச்சாரட்தில் ஈடுபடுகிறார்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) சார்பில் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) வெற்றி வேட்பாளர் தேர்போகி V. பாண்டியை ஆதரித்து, கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று (10-04-2026, வெள்ளிக்கிழமை) தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.

அதன்படி, இன்று மாலை 5 மணியளவில் காரைக்குடி எம்.ஜி.ஆர் சிலை அருகிலும், அதனைத் தொடர்ந்து மாலை 6 மணியளவில் தேவகோட்டை தியாகிகள் பூங்கா அருகிலும் பொதுமக்களைச் சந்தித்து அவர் வாக்குச் சேகரிக்கிறார்.

‘குக்கர்’ சின்னத்தில் போட்டியிடும் தனது வேட்பாளருக்காகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஆதரவுடன் நடைபெறும் இந்தப் பிரச்சாரக் கூட்டத்தில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் கலந்துகொள்ள உள்ளனர்.