X

வியட்நாம் போர் வீரர்கள் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்திய இந்திய ஜனாதிபதி

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வியட்நாம் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் ஆறு நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுளார். அவருடன் மத்திய அரசின் உயரதிகாரிகள் குழுவும் சென்றுள்ளது.

நாளை வரை வியட்நாமில் தங்கும் ராம்நாத் கோவிந்த், அந்நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பல்வேறு தலைவர்களை சந்தித்து இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார்.

இந்நிலையில், தனது பயணத்தின் 3ஆம் நாளான இன்று ஹனோய் நகருக்கு சென்றார் ராம்நாத் கோவிந்த். அவரை தேசிய சபை தலைவர் நிகுயென் தி கிம் நிகான் வரவேற்றார். இருவரும் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து ஹனோயில் உள்ள போர் வீரர்கள் மற்றும் தியாகிகள் நினைவுச் சின்னத்தில் ராம்நாத் கோவிந்த் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் தேசிய சபையில் ராம்நாத் கோவிந்த் உரையாற்ற உள்ளார்.