அரசியலில் விஜய் தொட்டில் குழந்தை – ராஜேந்திர பாலாஜி தாக்கு
மதுரையில் நடந்த தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநில மாநாட்டில், கட்சியின் தலைவர் விஜய், தி.மு.க. குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். அதேபோல் அ.தி.மு.க.வின் தற்போதைய நிலை குறித்தும் விமர்சித்து இருந்தார்.
இதுதொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில்,
* அரசியலில் தொட்டில் குழந்தையான த.வெ.க. தலைவர் விஜய் சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார்.
* அ.தி.மு.க.வை பற்றி சிறுபிள்ளைத்தனமாக பேசியவர்கள் எல்லாம் அடையாளம் தெரியாமல் போனதுதான் வரலாறு.
* 31 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட அ.தி.மு.க.வை குறைத்து மதிப்பிடுவது விஜயின் வீழ்ச்சிக்கு முதல் படி.
* த.வெ.க. தலைவர் விஜய்க்கு வெற்றி கிடைக்கும் வாய்ப்பு அவரது பேச்சில் தெரியவில்லை.
* ஒரு சிலர் எழுதிக்கொடுக்கும் வசனங்களை மதுரையில் பேசி நடித்துவிட்டு சென்றிருக்கிறார் விஜய் என்று கூறினார்.
