Tamilசெய்திகள்

திருச்சியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்யும் விஜய்!

வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். சென்னை, பெரம்பூர் தொகு தியில் விஜய் சமீபத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி கீதாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பின்னர் அங்குள்ள பஸ் நிலையம் அருகில் விஜய் பிரசார வேனில் நின்றபடி பேசி தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

இதையடுத்து விஜய் இன்று காலை 9 மணி அளவில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வருகிறார். பிறகு விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் திருச்சி கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.

திருச்சி கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகம் பாலக்கரை மெயின்ரோட்டில் மாநகராட்சி 2-வது மண்டல குழு அலுவலக வளாகத் தில் உள்ளது. உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகம் திருச்சி கிழக்கு தாலுகா அலுவலகம் விமான நிலையம் அருகில் கொட்டப்பட்டு என்ற இடத்தில் உள்ளது.

இதில் ஏதாவது ஒரு இடத்தில் விஜய் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக, அந்த இரண்டு இடங்களையும் தமிழக வெற்றி க்கழகத்தின் மூத்த நிர்வாகிகளான முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், குப.கிருஷ்ணன் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.

பின்னர் மூத்த நிர்வாகிகளும் திருச்சியை சேர்ந்த த.வெ.க. நிர்வாகிகளும் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றனர் . அங்கு போலீஸ் கமிஷனர் காமினியிடம், விஜய் திருச்சி டி.வி.எஸ். டோல்கேட், மரக் கடை எம்.ஜி.ஆர். சிலை, கே.கே.நகர், ஏர்போர்ட் வயர்லஸ் ரோடு ஆகிய 4 இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்வதற்கு அனுமதி கேட்டும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தரும்படி கேட்டும் மனு கொடுத்தனர்.

இதையடுத்து காந்திக்மார்க்கெட் மரக்கடை பகுதியில் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இன்று காலை விமானம் மூலம் திருச்சி வரும் விஜய், காலை 11மணியள வில் மாநகராட்சி 2-வது மண்டல குழு அலுவலக வளாகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். தொடர்ந்து மரக்கடை பகுதிக்கு சென்று பிரசாரம் மேற் கொள்ள உள்ளார். விஜய் பிரசாரத்தையொட்டி போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வேட்பு மனு தாக்கல் செய்யும் நெடுக ரோடு ஷோ செல்ல அனுமதி வாங்கவில்லை. எனவே ரோடு ஷோ நடத்த விஜய்க்கு அனுமதி வழங்கவில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.