Tamilசெய்திகள்

2028-ம் ஆண்டுக்குள் உலகின் 3-வது பெரிய பொருளாதாரம் மிக்க நாடாக மாறுவோம் – பிரதமர் மோடி பேச்சு

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியதையொட்டி இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். இந்நிலையில் பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி கூறியதாவது:

* பட்ஜெட் கூட்டத்தொடர் மிகமிக முக்கியமானது. இந்தியாவின் வளர்ச்சியை மனதில் வைத்து எம்.பி.க்கள் செயல்பட வேண்டும்.

* இந்தியாவின் வளர்ச்சிக்கு அனைத்து எம்.பி.க்களும் உறுதுணையாக இருப்பார்கள் என நம்புகிறேன்.

* ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு எப்போதும் தயாராகவே இருக்கிறோம்.

* பாராளுமன்றத்தில் 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் பெருமையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார்.

* உலகத்தின் நம்பிக்கையாக தற்போது இந்தியா வளர்ச்சி அடைந்து இருக்கிறது.

* ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தங்களால் ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது.

* பாராளுமன்றத்தில் ஜனாதிபதி நேற்று ஆற்றிய உரை 140 கோடி இந்திய மக்களின் வெளிப்பாடாக அமைந்திருந்தது.

* 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டுவதற்கு அடுத்து வரும் 25 ஆண்டுகள் மிக முக்கியம்.

* இளைய சமுதாயம், சேவை துறையினரை மனதில் வைத்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

* ஜி.எஸ்.டி. வருவாயில்1.65 லட்சம் கோடியை திரட்டி சாதனை படைத்திருக்கிறோம்.

* 2028-ம் ஆண்டுக்குள் உலகின் 3-வது பெரிய பொருளாதாரம் மிக்க நாடாக மாறுவோம்.

* நீண்ட கால பிரச்சனை என்ற நிலையில் இருந்து நீண்ட கால தீர்வு என்ற நிலையை நோக்கி இந்தியா பயணிக்கிறது.

* பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு நீண்ட கால வளர்ச்சிக்கு வித்திடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.