Tamilசெய்திகள்

கூட்டணியின் நலன் கருதி போட்டியிடும் இடங்கள் குறித்து முடிவு எடுப்போம் – தொல்.திருமாவளவன் பேட்டி

சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகத்தின், அகக்ட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

திருப்போரூட் எம்.எல்.ஏ பாலாஜி, மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார்.

கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை, தாமதம் என்றே சொல்லலாம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுக கூட்டணி நலனுக்கு எதிராக போகாது.

விசிக வேட்பாளர்களுக்கு நேர்காணல் செய்வதற்கான வாய்ப்பு குறைவு தான்.

கூட்டணியின் நலன் கருதி போட்டியிடும் இடங்கள் குறித்து முடிவு எடுப்போம்.

வேல்முருகனிடம் பலமுறை பேசி உள்ளேன். திமுக கூட்டணியில் அவர் தொடர்வது அவருக்கும், கூட்டணிக்கும் இன்றியமையாத தேவை.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பா.ஜ.க டெல்லி தலைமை கிள்ளுக்கீரையாக நினைக்கிறது.

அதிமுக டெல்லியை தேடிச் செல்லும் நிலை உருவாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.