Tamilசெய்திகள்

ஈரானுக்கு ஆதரவாக போரில் இணைந்த ஏமன் நாட்டின் ஹவுதி அமைப்பு!

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போர் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி தொடங்கியது. ஒரு மாதம் காலமாக நீடித்து வரும் இந்த போரில், ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. மேலும், இந்த போரினால் ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், ஈரானுக்கு எதிரான போருகு பதிலடியாக இஸ்ரேல் மீது ஏமன் நாட்டின் ஹவுதி அமைப்பு முதல் முறையாக பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி போரில் இணைந்துள்ளது.

இஸ்ரேலின் டிமோனா அணு ஆராய்ச்சி மையம் குறிவைக்கப்பட்டு ஹவுதி அமைப்பு அனுப்பிய ஏவுகணையை இடைமறித்து தாக்கி அழித்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.