Tamilவிளையாட்டு

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் – சானியா மிர்சா, அன்னா டேனிலினா ஜோடி 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, அன்னா டேனிலினா (கஜகஸ்தான்) ஜோடி, டால்மா கால்பி (ஹங்கேரி)- பெர்னடா பெரா (அமெரிக்கா) இணையுடன் மோதியது.

இதில் சானியா ஜோடி 6-2, 7-5 என்ற நேர் செட்டில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது. சானியா ஜோடி அடுத்து அன்ஹெலினா கலினினா (உக்ரைன்)- அலிசன் வான் உட்வானிக் (பெல்ஜியம்) இணையை எதிர்த்து விளையாட உள்ளது. 36 வயதான சானியா மிர்சா அடுத்த மாதத்துடன் சர்வதேச டென்னிசில் இருந்து விடைபெறுகிறார். அவர் விளையாடும் கடைசி கிராண்ட்சிலாம் போட்டி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.