இந்தியா வந்தடைந்தார் ஜெர்மனி அதிபர் – பிரதமர் மோடியை சந்திக்கிறார்
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜெர்மனிஅதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் ஜனவரி 12 மற்றும் 13-ம் தேதிகளில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். இது ஜெர்மனி அதிபரின் இந்தியாவிற்கான முதல் அதிகாரப்பூர்வ பயணமாகும்.
12-ம் தேதி அகமதாபாத்தில் பிரதமர் மோடி, ஜெர்மனி அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், கல்வி, திறன் மற்றும் இயக்கம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேலும் தீவிரப்படுத்துவது குறித்தும், பாதுகாப்பு, அறிவியல், புதுமை மற்றும் ஆராய்ச்சி, பசுமை, நிலையான மேம்பாடு, மக்களிடையேயான உறவுகள் போன்ற முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் அவர்கள் விவாதிப்பார்கள் என இந்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஜெர்மனி அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று அதிகாலை வந்தடைந்தார்.
ஜெர்மனி அதிபரின் இந்தியாவிற்கான முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
