இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி
அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போரால் இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 92 ரூபாய் 31 காசுகளாக சரிந்தது. கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 25% உயர்ந்த நிலையில் இந்திய ரூபாய் மதிப்பும் வீழ்ச்சியடைந்தது.
கச்சா எண்ணெயின் சர்வதேச சந்தை மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் மூலம் டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு மதிப்பீடு செய்யப்படுகிறது.
