தங்கம் விலை குறைந்தது – சவரன் ரூ.1,18,080க்கு விற்பனை
தங்கம் விலை கடந்த 10, 11-ந்தேதிகளில் விலை உயர்ந்து வந்த நிலையில், 12, 13-ந்தேதிகளில் விலை குறைந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 970-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 760-க்கும், நேற்று கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.14,900-க்கும், சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,19,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ரூ.1,18,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 குறைந்து ரூ.14,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை ரூ.10 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.280-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
