தமிழகத்தில் மீண்டும் வெப்பம் அதிகரிக்கும் – வானிலை ஆய்வும் மையம்
கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் சில பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வந்தது. மேலும், தமிழகம் முழுவதும் ஒருவாரம் லேசான மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதையடுத்து சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் குறைந்து மேக மூட்டத்துடன் காணப்பட்டு வந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் மீண்டும் வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய தீபகற்பப் பகுதிகளில் வளிமண்டலச் சூழல் மீண்டும் சீரடைந்து வருவதால், இடியுடன் கூடிய மழையானது தென் தமிழகத்தின் மலைப்பகுதிகள் மற்றும் கேரளாவின் சில பகுதிகளுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்படும். இதனால், தமிழகத்தின் உட்புற மாவட்டங்களில் மதிய நேர வெப்பம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கும், என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வறண்ட வானிலை நீடிப்பதன் காரணமாக, கோடை காலத்திற்கான சூழல் மெல்ல மெல்ல மீண்டும் நிலைபெறும். சென்னை போன்ற கடலோரப் பகுதிகளில் காற்றில் ஈரப்பதம் (Humid) தொடர்ந்து அதிகமாகவே இருக்கும், என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
