இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்டுள்ள இன்றைய வானிலை நிலவரம்!
இந்திய வானிலை ஆய்வு மையம் இன்றைய வானிலை நிலவரம் எப்படி இருக்கும், என்ற தகவலை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ஒடிசா, ராயலசீமா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இன்று கடுமையான வெப்ப அலை வீசக்கூடும். அதே சமயம், மேற்கு வங்காளத்தின் இமயமலைப் பகுதிகள், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிமில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆந்திரா மற்றும் கர்நாடகாவின் கடலோரப் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய புயல் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா மற்றும் மாஹே ஆகிய பகுதிகளில் இன்று அதிக வெப்பமும், புழுக்கமும் கலந்த வானிலையே நிலவும் என்பதால் பொதுமக்கள் போதிய முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
