Tamilசெய்திகள்

திருச்சி அருகே ஓடும் காரில் திடீர் தீ – அதிஷ்ட்டவசமாக 6 பேர் உயிர் தப்பினர்

திருச்சி அருகே சாலையில் நேற்று சனிக்கிழமை சென்ற காரில் திடீா் தீ ஏற்பட்ட நிலையில் காரில் சென்ற 6 போ் உயிர் தப்பினா்.

திருச்சி மாவட்டம், தொட்டியம் கீழ காா்த்திகைப்பட்டியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (வயது 35). இவா் பொருள்கள் வாங்க தனது குடும்பத்தினா் 5 பேருடன் திருச்சி நோக்கி நேற்று காரில் வந்து கொண்டிருந்தார்.

கார் திருப்பராய்த்துறை சுங்கச்சாவடி அருகே வந்த போது காரின் எஞ்சினில் இருந்து புகை வந்து உள்ளது. இதையடுத்து காா்த்திகேயன் உடனடியாக காரை நிறுத்திவிட்டு தீயை அணைக்க முயன்று உள்ளார். ஆனால் திடீரென தீ மளமளவென பரவியதால் காரிலிருந்த 6 பேரும் உடனே கீழே இறங்கி உள்ளனர். இதனால் அதிா்ஷ்டவசமாக அவா்கள் உயிா் தப்பினா்.

இதுதொடா்பாக அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் வந்த தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா். இருப்பினும் காா் முழுவதுமாக எரிந்து போனது. விபத்து குறித்து பெட்டவாய்த்தலை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.