Tamilசெய்திகள்

210 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் – எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி அனைத்து கட்சித் தலைவர்களும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் திருவாரூர், திருச்சியில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். சிவகங்கையில் நேற்று அவர் பரப்புரையில் ஈடுபட்டார்.

இந்த நிலையில், ஒரு ஊடகத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த நேர்காணலில், “ஏற்கனவே 195 சட்டமன்றத் தொகுதிகளில் மக்களைச் சந்தித்திருக்கிறேன். செல்லும் இடம் எல்லாத்திலும் மக்கள் எழுச்சி இருக்கிறது. நடைபெறும் தேர்தலில் 210 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்” எனத் தெரிவிதுள்ளார்.