1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான கோடை விடுமுறை அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை கோடை விடுமுறை என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஏப்ரல் 25 ஆம் தேதி வரை ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும். கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 1 ஆம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கபப்டும், என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. பள்ளிகள் வாக்குச்சாவடி மையங்களாகப் பயன்படுத்தப்பட உள்ளதால், தேர்தல் பணிகளுக்காகத் தேர்வுகளை முன் கூட்டியே முடித்து விடுமுறை அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
