Tamilசெய்திகள்

சீனாவில் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு – அடித்துச் செல்லப்பட்ட சொகுசு கார்கள்

சீனாவின் ஹெபெய் மாகாணம், செங்டே பகுதியில் உள்ள குவான்செங் மஞ்சு தன்னாட்சி கவுண்டியில் நேற்று இரவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பயங்கரமான திடீர் வெள்ளப்பெருக்கு (Flash Flood) ஏற்பட்டது.

கொட்டித் தீர்த்த கனமழையின் காரணமாக, குடியிருப்புப் பகுதிகளுக்குள் மிக அதிவேகத்துடன் புகுந்த வெள்ள நீர், கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த டஜன் கணக்கான சொகுசு கார்களைப் பொம்மைகளைப் போல மிக லாவகமாக அடித்துச் சென்றது. சாலையெங்கும் பாய்ந்தோடிய பிரம்மாண்ட வெள்ளத்தில் கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி மிதந்து செல்லும் நெஞ்சைப் பதறவைக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிரப் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.