சென்னை மெட்ரோ ரெயிலில் பயணித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை மெட்ரோ ரெயிலில் மக்களோடு மக்களாக பயணித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சென்னை செண்ட்ரல் முதல் தேனாம்பேட்டை வரை மெட்ரோ ரெயிலில் பயணித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுடன் அமர்ந்து கலந்துரையாடினார்.
அப்போது, முதலமைச்சரிடம் திமுக அரசின் திட்டங்களை கூடி மக்கள் நன்றி தெரிவித்தனர். இதையடுத்து திமுக ஆட்சி மீண்டும் வருவதற்கு ஆதரவு தருமாறு மெட்ரோ பயணிகளிடம் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், முதலமைச்சரிடம் கலந்துரையாடிய மெட்ரோ ரெயில் பயணிகள் அவருடன் ஆர்வத்துடன் செல்பி எடுத்துகொண்டனர்.
