Tamilசெய்திகள்

தலைமை காவலர் கோதண்டபாணிக்கு த.வெ.க ஆட்சியில் நீதி கிடைக்க வேண்டும் – டிடிவி தினகரன் வலியுறுத்தல்

அரசு மருத்துவர்களின் அலட்சிய சிகிச்சையால் தனது மகளின் கால் பாதம் பறிபோனதாகக் கூறி, கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஐந்தாண்டுகளுக்கும் மேலாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தலைமைக் காவலர் திரு. கோதண்டபாணிக்கு தற்போதைய புதிய த.வெ.க ஆட்சியிலாவது நீதி கிடைக்குமா என்ற கேள்வியோடு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை தலைமைச் செயலக நுழைவுவாயிலில் அலட்சியமாகச் செயல்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திப் போராட்டம் நடத்திய காவல்துறையைச் சேர்ந்த தலைமைக் காவலர் கோதண்டபாணி சக காவலர்களால் அப்புறப்படுத்தப்பட்ட செய்திக்குக் கண்டனம் தெரிவித்துள்ள அவர், கடந்த ஆட்சியாளர்களைப் போலவே தற்போதைய புதிய ஆட்சியாளர்களும் அவரை அலைக்கழிப்பது முறையல்ல என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்த விவகாரத்தில் தலைமைக் காவலரின் புகாரின் மீது உரிய விசாரணை நடத்தி, மருத்துவர்கள் அலட்சியத்துடன் செயல்பட்டிருப்பது உறுதியானால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதோடு, கால் பாதத்தை இழந்த அவரின் மகளுக்குத் தேவையான உயர்தர மேல் சிகிச்சைக்குரிய முழு ஏற்பாடுகளையும் செய்து தர வேண்டும் என முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களை டிடிவி தினகரன் நேரிடையாக வலியுறுத்தியுள்ளார்.