Tamilசெய்திகள்

பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கைகளில் நமக்கு உடன்பாடு இல்லை – சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் உரை

17-வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் 3-வது நாள் நிகழ்வு தொடங்கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* இலங்கை தமிழர் நலனுக்காக உண்ணாவிரத போராட்டத்தில் இருந்துள்ளோம்.

* விஜய் மக்கள் இயக்கம் மூலமாக பல வழிகளில் மக்களுக்கு உதவியாக இருந்துள்ளோம்.

* தனது திரைப்படங்கள் மூலமாக சமூகநீதியை பேசினோம்.

* மக்கள் இயக்கத்தினர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வென்றுள்ளனர்.

* கட்சி ஆரம்பித்தபின் வீட்டிற்குள் செல்வோர் மத்தியில், நம் மக்கள் வீட்டிற்குள் சென்ற பின் தான் கட்சி ஆரம்பித்தோம்.

* 2 பெண் தலைவர்களை கொள்கை தலைவர்களாக அறிவித்த ஒரே கட்சி தவெக.

* பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கைகளில் நமக்கு உடன்பாடு இல்லை.

* நமது கட்சியை நடிகன் கட்சி என கூறி நக்கல், நையாண்டி செய்கிறார்கள்.

* தவெகவின் மக்கள் சந்திப்பிற்கு அவ்வளவு தடைகள் விதிக்கப்பட்டது.

* நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணியின்றி தனிப்பெரும் கட்சியாக வளர்ந்துள்ளோம்.

* கரூர் உயிரிழப்பு கொடூர சம்பவம் எப்போதும் நெஞ்சத்தை விட்டு அகலாது.

* தமிழகத்தில் தற்போது மிகமிக சாமான்யர்களின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

* தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பமும் முக்கியம் என சொல்வது தான் நமது ஆட்சி.

* காசு கொடுத்து ஓட்டு வாங்கும் நச்சு கலாச்சாரத்தை ஒழித்துள்ளோம்.

* நேர்மையான நிர்வாகம் என்பதில் த.வெ.க. நிர்வாகம் உறுதியாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.