செயற்கை நுன்னறிவு மிக்க பொறியியல் வல்லுநர்களின் மையமாக இந்தியாவை உருவாக்கும் பயணத்தில் ரேவேச்சர்! – சென்னையில் கல்வி மாநாட்டை நடத்தியது
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மிக்க திறமையாளர்களை உருவாக்கும் முன்னணி செயல்தளமான ரெவேச்சர், ஏஐ யுகத்தில் இந்திய பொறியியல் கல்வியின் எதிர்காலம் குறித்த ‘ஏஐ அகாடமி இன் எ பாக்ஸ்’ தேசிய மாநாடு என்ற பெயரில் நாட்டின் முதல் வகையான கல்வி மாநாட்டை இன்று சென்னையில் நடத்தியது. இதில் 40-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களின் தலைவர்கள், இடிஎஸ், நாஸ்காம், நீலிட்ஆகியஅமைப்புகளின் பிரதிநிதிகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில் துறை வல்லுநர்கள் பங்கேற்றனர்.
தொலைநோக்கு சிந்தனையோடும், பொறுப்புணர்வோடும் நடைபெற்ற இம்மாநாட்டில் 10,00,000-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வேலை வாய்ப்புகளை உருவாக்கிய தொழில் நிறுவனங்கள், 15,00,000-க்கும் அதிகமான பட்டதாரிகளை உருவாக்குகின்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் 50 மில்லியனுக்கும் அதிகமான மதிப்பீடுகளை நடத்தியுள்ள இடிஎஸ் அமைப்பின் பிரதிநிதிகளும் பங்கேற்றது இந்த மாநாட்டின் சிறப்பை எடுத்துக்காட்டுகிறது.
இந்திய வெளியுறவுத்துறை முன்னாள் செயலரான ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு, ரெவேச்சர் நிறுவனத்தின் இணை நிறுவனர் அஷ்வின் பரத் மற்றும் தலைமை செயல் அலுவலர்தான் மூர்த்தி ஆகியோர் இணைந்து எழுதிய ‘Engineering India’s Next Engineer’ என்ற பெயரில் ரெவேச்சர் – ன் முதன்மை அறிக்கையை வெளியிட்டார்.
ஷ்ரிங்லா, ‘ஏஐ அகாடமி இன் ஏ பாக்ஸ்’ திட்டத்தைப் பாராட்டினார், “ஏற்கனவே மூன்று இந்தியப் பல்கலைக்கழகங்களில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு, தயார் நிலையில் செயல் மாதிரியை கொண்டுள்ள இத்திட்டத்தைப் பயன்படுத்தி மாற்றத்தைத் தொடங்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைப் புரட்சியை சுட்டிக்காட்டி, “இதை உருவாக்க முடியுமா என்று உலகமே சந்தேகப்பட்ட போது யுபிஐ (UPI) இந்தியாவில் எவ்வாறு உருவாக்கப்பட்டதோ, அதே போன்ற ஒரு தருணம் தற்போதைய ஏஐ செயல்பாட்டில் திறமை உருவாக்கத்திற்கும் நமக்குத் தேவைப்படுகிறது. இது தேசிய அளவில் ஒருங்கிணைப்புடன் விரைவாக தொடங்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
தொழில்துறையுடன் இணைந்த பாடத்திட்டம், போர்ட்ஃபோலியோ மதிப்பீடு மற்றும் 93% பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நார்த்தீஸ்டர்ன் பல்கலைக்கழக மாதிரியிலான கூட்டுறவுக் கல்வி முறையை இந்தியக் கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இன்றைய தொழில்நுட்ப மாற்றங்களை எதிர்காலத்திற்கான ஆதாயமாக மாற்ற பாடத்திட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்வதும், தெளிவான நோக்கத்தோடு படிக்க மாணவர்களை இதில் பங்கேற்ற தலைவர்கள் ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். “மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது அவர்களின் லட்சிய நோக்கமே தவிர, உலகம் ஏற்கனவே கைவிட்டு விட்ட பழமையான பாடத்திட்டமோ அல்லது பணிக்கு ஆட்சேர்ப்பு மாதிரியோ அல்ல” என்று அவர் மேலும் கூறினார்.
ரெவேச்சரின் இந்த அறிக்கை, ஏஐ தொழில்நுட்பத் திறன் இடைவெளி, பணி வழங்கும் நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் எதிர்காலத்திற்குத் தேவையான பொறியியல் வல்லுநர்களின் பெரும்படையை உருவாக்குவதற்கான உத்திகளை விரிவாக ஆராய்கிறது.
கௌரவ விருந்தினராகப் பங்கேற்ற ‘நீலிட்’ (NIELIT) – ன் துணை வேந்தர் டாக்டர் மதன் மோகன் திரிபாதி பேசுகையில், ஏஐ தொழில்நுட்பம் ஆய்வகங்களைத் தாண்டி உற்பத்தி, நிதி, நிர்வாகம், சுகாதாரம் எனஅ னைத்துத் துறைகளையும் உருமாற்றி வரும் இந்த சூழலில், இந்தியக் கல்வி நிறுவனங்கள் இளைஞர்களை அதற்கு ஏற்ப விரைவாகத் தயார்படுத்துகின்றனவா என்ற கேள்வியை முன்வைத்தார்.
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் பல்கலைக்கழக அந்தஸ்து பெற்ற முதல் நிறுவனமான நீலிட், ஏஐ (AI), விஎல்எஸ்ஐ (VLSI), இணைய பாதுகாப்பு (Cyber Security) ஆகியவற்றில் பட்டப்படிப்புகளை வழங்குவதாக டாக்டர் திரிபாதி தெரிவித்தார். மேலும், அமராவதியில் இந்தியாவின் முதல் குவாண்டம் மற்றும் ஏஐ பல்கலைக்கழக வளாகத்தை அமைக்க ஆந்திர அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்அறிவித்தார்.
கல்வி-தொழில்துறை இடைவெளி குறித்துப் பேசிய அவர், “தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப கல்வி நிறுவனங்கள் செயல்படும் போது பணியமர்த்தப்படுவதற்கான திறன் என்பது, தற்செயலான ஒன்றாக இல்லாமல் திட்டமிடப்பட்ட வடிவமைப்பாக மாறுகிறது” என்றார். ‘ஏஐ அகாடமி இன் ஏ பாக்ஸ்’மாதிரியே இடைவெளியை நிரப்புவதற்கு தேவையான பாலம் என்றும், இச்செயல்திட்டத்தில் நீலிட் முழுபங்குதாரராக தீவிரமாக செயல்படும் என்றும் அவர்உறுதியளித்தார்.
ரெவேச்சர்-ன் இணை நிறுவனர் அஷ்வின் பரத் பேசுகையில், “இன்றைய இளைஞர்கள் திறன் குறைந்தவர்கள் அல்ல, கல்வி முறையை விட வேகமாக மாறியிருக்கும் சந்தைக்குள் நுழைகிறார்கள். இதில் அவர்களது தவறு எதுவுமில்லை. இக்குறைபாட்டை சரி செய்ய வேண்டியது நமது கடமை. தொழில்முறை வல்லுநர்களை பேராசிரியர்களாகக் கொண்டு வருவதும், தற்போதைய தேவைகளுக்கேற்ற பாடத்திட்டத்தை செயல்படுத்துவதே இதற்கான தீர்வாகும்” என்றார்.
ரெவேச்சர் நிறுவனத்தின் தலைமை செயலாக்க அதிகாரி .தான் மூர்த்தி பேசுகையில், “உலகின் மிகப்பெரிய ஏஐ பொறியியல் திறமையாளர்களை உருவாக்கும் மையமாக உயர்வதற்கு இந்தியாவுக்கு அனைத்து சாதகமான சூழல்களும் உள்ளன. ஆனால், அந்த வாய்ப்பை நிஜமாக்க கல்வித் துறைக்கும் தொழில் துறைக்கும் இடையே தொடர்ச்சியான ஒத்துழைப்பு அவசியமாகும். ‘ஏஐ அகாடமி இன் ஏ பாக்ஸ்’ கட்டமைப்பு ரெவேச்சரின் நிறுவன அளவிலான ஏஐ கற்றல் திறன்களை உயர் கல்வியில் நேரடியாகக் கொண்டு சேர்க்கிறது. இதன் மூலம் கல்வி நிறுவனங்கள் தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ற, நேரடி அனுபவத்துடன்கூடிய கற்றல் அனுபவத்தை மாணவர்களுக்கு வழங்க முடியும். ஏஐ சார்ந்த பணிச்சூழலில் முதல் நாளிலிருந்தே திறம்பட பங்களிக்கக்கூடிய பட்டதாரிகளை உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையில் பல்கலைக்கழகங்களும் பணி வழங்கும் தொழில் நிறுவனங்களும் ஒரே நேர்கோட்டில் இணைந்திருப்பதை இந்த மாநாட்டு விவாதங்கள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன,” என்றார்..
ஏஐ அகாடமி இன் ஏ பாக்ஸ்
மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்ட இந்தத் தளம், நிறுவன அளவிலான ஏஐ பயிற்சி நிபுணத்துவத்தை கல்லூரிகளுக்கு விரிவாக்கி, எதிர்காலத்திற்குத் தேவையான செயற்கை நுண்ணறிவு திறனுள்ள பொறியாளர்களாக பட்டம் பெற்று தங்கள் எதிர்காலப் பணியை தொடங்க மாணவர்களுக்கு உதவுகிறது.

குழு விவாதங்கள்
‘வேலைவாய்ப்புகளில் ஏஐ-ன் தாக்கம்’ மற்றும் ‘ஏஐ யுகத்திற்காகக் கல்வி நிறுவனங்கள் எவ்வாறு தங்களை உயர்த்திக் கொள்கின்றன’ ஆகிய தலைப்புகளில் நிபுணர்கள் பங்கேற்ற இரு முக்கிய குழு விவாதங்கள் நடைபெற்றன.
கேட்டலிங்க்ஸ் – ன் பார்ட்னர் ராம்குமார் ராமமூர்த்தி நெறிப்படுத்திய முதல் அமர்வு, ஏஐ எவ்வாறு பணியாளர்களின் தளத்தை மறுவடிவமைப்பு செய்கிறது மற்றும் தொழில்துறைக்கு தேவையான செயற்கை நுண்ணறிவு திறன் உள்ளவர்களாக மாணவர்களை பொறியல் கல்வி நிறுவனங்கள் உருவாக்குவதற்கான அவசரத் தேவையை ஆராய்ந்தது.
கேபிஎம்ஜி இந்தியாநிறுவனத்தின் பார்ட்னர் நாராயணன் ராமசாமி நெறிப்படுத்திய இரண்டாவது அமர்வு, செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட கல்வி வளாகங்களில் பாடத்திட்டத்தில் புதுமைகளைப் புகுத்துவது மற்றும் தொழில்துறை கூட்டாண்மையின் முக்கியத்துவம் குறித்து விவாதித்தது.
தொழில்துறையின் கண்ணோட்டத்திற்கான நிபுணர்கள் குழு விவாதத்தில் ரெவேச்சர் – ன் தலைமை செயலாக்க அதிகாரி தான் மூர்த்தி, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வரதராஜ் வி, காக்னிசன்ட் நிறுவனத்தின் உயர் அதிகாரி சிங்காரவேலு ஏகாம்பரம், பேங்க் ஆஃப் அமெரிக்காவின் உயர் அதிகாரி தினேஷ் ஜெயராஜ், இடிஎஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மோனா அகர்வால் ஆகியோர் பங்கேற்றனர்.
கல்வி நிறுவனங்களின் கண்ணோட்டத்தை வழங்கிய நிபுணர்களது விவாத அமர்வில் டாக்டர் சேகர் விஸ்வநாதன் (விஐடி), நாகார்ஜுனா சதினேனி (பிஇஎஸ் பல்கலைக்கழகம்), அப்துல் காதிர் (கிரசண்ட் பல்கலைக்கழகம்), டாக்டர் சுதா மோகன்ராம் (ஸ்ரீஈஸ்வர் பொறியியல் கல்லூரி) ஆகியோர் பங்கேற்றனர்.
நேரலையாக நடைபெற்ற பார்வையாளர்களின் கருத்துக் கணிப்பு
கேலன்ட் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீராம் ராஜகோபால் தலைமையில் நடைபெற்ற நேரலை கருத்துக் கணிப்பு, இந்தியப் பொறியியல் கல்விச் சூழலில் ஏஐ தயார் நிலை, பாடத்திட்ட மாற்றம், தொழில் துறைக்கு தேவையான திறன் உருவாக்கம் ஆகிய அம்சங்கள் மீது பங்கேற்பாளர்களின் கருத்துகளை கேட்டறிந்தது. கல்லூரி கற்றலுக்கும், தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளுக்கும் இடையில் உள்ள இடைவெளியை நிரப்ப உயர் கல்வித்துறை முயற்சிக்கும் நிலையில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வாய்ப்புகள் மற்றும் அதிலுள்ள சவால்கள் குறித்து முக்கியத் தரவுகளை இந்த கருத்துக்கணிப்பு வழங்கியது.
விஐடி பல்கலை, சிவ நாடார் பல்கலை, பிஇஎஸ் பல்கலை, கீதம் பல்கலை, பென்னட் பல்கலை, சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கிரசண்ட் பல்கலை, ராஜலட்சுமி பல்கலை, ஸ்ரீ ஈஸ்வர், கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரி, குமரகுரு, எம்எல்ஆர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, ஜிஎச் ரைசோனி மற்றும் ராஜகிரி உள்ளிட்ட பல முன்னணி கல்வி நிறுவனங்கள் இம்மாநாட்டில் பங்கேற்றன.
