சிம்லாவில் திபெத்திய சமூகத்தினர் நடத்திய அமைதிப் பேரணி
திபெத்திய மக்களின் பண்பாடு, மொழி மற்றும் தனித்துவமான அடையாளத்தை இலக்கு வைத்து நடைமுறைப்படுத்தப்படும் கட்டுப்பாடுகளுக்கு எதிராக உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், சிம்லாவில் திபெத்திய சமூகத்தினர் அமைதிப் பேரணி ஒன்றை நடத்தினர்.
திபெத் விடுதலைப் போராட்டத்திற்காக உயிர்நீத்த தியாகிகளின் நினைவாக இந்த பேரணி நடைபெற்றது.
சீன ஆட்சியின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், சுதந்திரம், மனித உரிமைகள் மற்றும் தங்களது ஆன்மீகத் தலைவரான தலைலாமாவின் தாய்நிலத் திரும்பலை வலியுறுத்தியும், கடந்த 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இதுவரை 170-க்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் தீக்குளித்து தங்களது உயிரைத் தியாகம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
