Tamilசெய்திகள்

பவன் கோயங்காவின் கருத்து எதிரொலி – இஸ்ரோ தலைவருக்கு இஸ்ரோ ஊழியர் சங்கங்கள் கடிதம்

விண்வெளித் துறையில் தனியார் மயமாக்கல் குறித்த இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்தின் (IN-SPACe) தலைவர் பவன் கோயங்காவின் கருத்துகள் பெரும் விவாதத்தைக் கிளப்பிய நிலையில், இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு இஸ்ரோ ஊழியர் சங்கங்கள் கவலை தெரிவித்துக் கடிதம் எழுதியுள்ளன.

வருங்காலத்தில் இஸ்ரோ புதிய ஏவு வாகனங்களைத் தயாரிக்காது என்றும், தனியார் நிறுவனங்களே அந்தப் பணியைச் செய்யும் என்றும் பவன் கோயங்கா கூறிய கருத்துத் தங்களுக்குள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளன.

தனியார் மயமாக்கல் நடவடிக்கைகளால் தற்போது பணியாற்றி வரும் இஸ்ரோ ஊழியர்களின் வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலம் பாதிக்கப்படுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ள அச்சங்கங்கள், விண்வெளித்துறையில் இஸ்ரோவின் எதிர்காலப் பங்கு மற்றும் செயல்பாடுகள் என்ன என்பது குறித்துத் தெளிவான விளக்கமளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.

இஸ்ரோவில் பணியாற்றும் மொத்தம் 18,100 ஊழியர்களில் சுமார் 5,000 பேரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னணி ஊழியர் சங்கங்கள் இணைந்தே இக்கடிதத்தை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது